இந்தியாவில் அதிக கோயில்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா..? – மும்பை ஐஐடி
மும்பை ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளது என தகவல்.
நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளன.
அதன்படி, தமிழகத்தில் 79,154 கோயில்களும்,மகாராஷ்டிராவில், 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்காளத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் பேருக்கு 62 கோயில்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள், கோயில்களை மையப்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.