மது பானங்களை வீட்டில் டெலிவரி செய்ய திட்டம்? எங்கெல்லாம் தெரியுமா.?
ஆன்லைனில் மது பானம் : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆம், Swiggy, Zomato மற்றும் BigBasket போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்கள் விரைவில், குறைந்த-ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை ஆன்லைனில் கிடைக்கும் என்று ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மது விநியோகத்தின் சாத்தியமான நன்மைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து மாநில அதிகாரிகள் இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் மதுபான உற்பத்தியாளர்களிடமிருந்து கருத்துகள் கேட்டு வருவதாகபப் செயின் தி பீர் கஃபேவின் தலைமை நிர்வாகி ராகுல் சிங், ‘தி எகனாமிக் டைம்ஸ்’ நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார்.
இந்திய அளவில் மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவங்களான ஸ்விக்கி – சொமாட்டோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்கள் ஆவர். இவர்கள், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, சேவை பாதுகாப்பானது மற்றும் அனைத்து சட்டத் திட்டங்களுக்கும் இணங்குகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனா காலகட்டத்தின் போது, ஸ்விக்கி, சோமாட்டோவின் வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால், அந்த நிறுவனங்கள் மெட்ரோ அல்லாத பகுதிகளில் தங்கள் சேவைகளைப் பன்முகப்படுத்த ஆன்லைன் மதுபான விநியோகத்தைத் தொடங்கியது.
அதன்படி, Swiggy மற்றும் Spencer’s Retail ஆனது மேற்கு வங்காளத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்கிறது. அதேபோல், ஜார்க்கண்ட் அரசாங்கத்திடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பின் ஸ்விக்கி, தனது மது விநியோக சேவையை ராஞ்சியில் தொடங்கியது. இதனை தொடர்ந்து Zomato நிறுவனம் அதை பின்பற்றி, ராஞ்சியில் மது விநியோகத்தை தொடங்கியது.
அதே போல், புது டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் விரிவுபடுத்த அந்தந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் அதற்கான ஒப்புதல்கள் கிடைக்குமா? இல்லையா என்றுபொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Swiggy பயன்பாட்டில் ‘Wine Shops’ எனும் பகுதியின் கீழ், மது ஆர்டர் செய்ய முடியும். அதற்கு வயது சரிபார்ப்பு மற்றும் பயனர் அங்கீகாரம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வாங்கப்படுகிறது. குறிப்பாக, மது ஆர்டர் செய்யும் நபர் சான்றாக, ID மற்றும் செல்ஃபி அப்லோட் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆர்டரும் தனித்துவமான OTP உடன் வருகிறது, மேலும் மதுவுக்கான அளவு வரம்புகள் உள்ளிட்ட விதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.