கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளா மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு என்ன தெரியுமா?
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கேரளாவை மட்டும் விட்டு விடுமா என்ன? கேரளாவிலும் பலர் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அங்கு விசேஷ உணவுகள் வழங்கப்படுகிறதாம். அதாவது, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, சாம்பார், அவித்த முட்டை மற்றும் ஆரஞ்சு பழங்கள் வழங்கப்படுகிறதாம். மேலும், 10.30 க்கு ஒரு பழச்சாறு வழங்கப்படுகிறது.
மதிய உணவாக சப்பாத்தி, பொரித்த மீன் மற்றும் கேரள உணவுகள் வழங்கப்படுகிறது. மாலையில் பிஸ்கட் இரவில் அப்பம் மற்றும் இரண்டு வாழைப் பழங்களும் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வைரஸால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்து கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு காலை 2 அவித்த முட்டை, சோம்பல் ஆகியவை வழங்கப்படும்.
சிறிது நேர இடைவெளிக்கு பிறகு அன்னாசி பழங்கள் வழங்கப்படுகிறது. மத்திய உணவாக ரொட்டி வெண்ணை மற்றும் பழங்களும், இரவில் ரொட்டி முட்டை பொரியல் மற்றும் பழங்களும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.