ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் என்ன தெரியுமா?

காதல் தோல்விகளால் ஏற்பட்ட மன வலி தான் திருமணம் செய்துகொள்ளாததற்கு காரணம் என தொழிலதிபர் ரத்தன் டாடா பழைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

Ratan Tata

மும்பை : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு செய்தி வெளியானதுடன் பலரும் அவருடைய வாழ்க்கை விஷயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது என்றால் அவருடைய காதல் கதையையும், அவர் எதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பதைப் பற்றியும் தான்.

அவர் இறப்பதற்கு முன்பு உயிரோடு இருந்த சமயத்தில் கொடுத்த பழைய நேர்காணல் ஒன்றில், திருமணம் செய்து கொள்ளாதது பற்றியும், தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றியும் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.எனவே , அவர் பேசிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் விவரமாகப் பார்ப்போம்..

அமெரிக்காவில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போது ஒரு பெண்ணிடம் அவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நடக்க முடியாமல் போனதற்கு இந்தியா- சீனா போரும் ஒரு காரணமாக அமைந்தது. ஏனென்றால், ரத்தன் டாடா திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த போது அவரை வளர்த்த பாட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

இதன் காரணமாக, அமெரிக்காவிலிருந்து ரத்தன் டாடா உடனடியாக கிளம்பி இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியா வந்த பிறகு தான் காதலித்த அந்த அமெரிக்கப் பெண்ணை இந்தியாவிற்கு அழைத்துள்ளார். ஆனால், இந்தியா- சீனா போர் நடந்துகொண்டிருந்த காரணத்தால், அந்த பெண்ணால் இங்கு வரமுடியவில்லை அத்துடன் பயத்தில் ரத்தன் டாடாவிடம் நான் உங்களை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனவும் கூறியுள்ளார். பிறகு அந்த பெண் வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார்.

இப்படி தான் ரத்தன் டாடாவின் முதல் காதல் தோல்வி அடைந்தது. அவருடைய வாழ்க்கையில் ஒரு முறை மட்டும் திருமணம் நடைபெறாமல் நிற்கவில்லை கிட்டத்தட்ட 4 முறை திருமணம் நின்றுள்ளதாகவும், அந்த பழைய நேர்காணலில் ரத்தன் டாடா விளக்கமாகக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” என்னுடைய வாழ்க்கையில் திருமணம் நடைபெறவிருந்த போதிலும் சில காரணங்களால் 4 முறை பேச்சுவார்த்தை வரை சென்று நின்று இருக்கிறது.

எனக்கு 4 காதல் தோல்விகள் ஏற்பட்டு இருக்கிறது” எனவும் வேதனையை மறைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டே பேசியுள்ளார். அத்துடன் இதன் காரணமாக, ஏற்பட்ட மன வலி காரணமாகத் தான் இனிமேல் தனியாக வாழ்ந்துவிடலாம் என்ற மனநிலைக்கு வந்தேன் எனவும் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தை பற்றி ரத்தன் டாடா பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident