ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

Default Image

மற்ற மாநிலங்களில் இருந்து கழுதைகள் கடத்தப்பட்டு ஆந்திராவில் அதிக அளவில் இறைச்சி விற்பனை நடைபெறுவதற்கு காரணம் கழுதை இறைச்சி உடலுறவு இயக்கத்தை அதிகப்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனராம்.

ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சி விற்பனை சில சந்தைகளில் அமோகமாக நடைபெற்று வருகிறதாம். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கழுதைகள் கடத்தப்பட்டு கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் பிரகாஷம் ஆகிய ஆந்திராவில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறதாம். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் ஒரு கழுதையை விலை கொடுத்து வாங்க முடியுமாம். அந்த அளவுக்கு ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அதிகளவில் காணப்படுகிறது.

ஒரு கிலோ இறைச்சி வாங்க வேண்டுமானால் 600 ரூபாய் செலவிட வேண்டும். ஆந்திராவில் உள்ள உள்ளூர் வழக்கப்படி கழுதை இறைச்சியை பூப்பி என்றுதான் கூறுகிறார்கள். பெரும்பாலும் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் தான் ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுகிறதாம். ஆனால், 2011 ஆம் ஆண்டு விலங்கு உணவு சட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது கழுதை இறைச்சி அதில் சேர்க்கப்படவில்லையாம். எனவே இது விலங்குகளுக்கான படுகொலை எனவும், சட்டவிரோதமான செயல் எனவும் தான் கருதப்படுகிறதாம்.

மேலும் கழுதை இறைச்சி சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கும் எனும் மூடநம்பிக்கைகளும் அங்கு உள்ள மக்களிடையே அதிகம் பரவிக் காணப்படுகிறதாம். பண்டைய வழக்கப்படி கழுதை இறைச்சி அதாவது பூப்பி என்று அழைக்கப்படக்கூடிய இந்த இறைச்சி சாப்பிடுவதால் உடலில் தனிப்பட்ட வீரியம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் உடலுறவு இயக்கத்திற்கு இந்த கழுதை இறைச்சி மிகவும் உதவும் எனும் ஒரே நம்பிக்கையால் தான் அதிக அளவில் ஆந்திராவில் இந்த கழுதை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகின்றனவாம். இப்படியே போனால் வருங்காலத்தில் கழுதைகளை உயிரியல் பூங்காக்களில் மட்டுமே காண முடியும் என அனிமல் ரெஸ்கியூ ஆர்கனைசேஷனின் செயலாளர் கோபால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்