ஆந்திரப் பிரதேசம் : மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் மீன் ஒன்று பெரிய விலைக்கு விற்பனையான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்கினேடிபள்ளி மண்டல் அப்பனா ராமுனி லங்கா, கெஜின்னரா எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் வலையில் புலசா மீன் ஒன்று பிடிபட்டது.
பொதுவாகவே இந்த மீன் அதனுடைய எடைக்கு தகுந்தபடி, பெரிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி தான், தற்போது செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் வலையில் சிக்கிய ஒரு மீன் பெரிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த புலசா மீன் அந்த பகுதியில் ஏலத்தில் விடப்பட்டது.
ஏராளமானோர் போட்டியிட்ட இந்த ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சர்பஞ்ச் பேரே ஸ்ரீனு அப்பனா ராமுனி ரூ.24,000 கொடுத்து மீனை வாங்கினார். இவ்வளவு விலை கொடுத்து இந்த மீனை எதற்காக வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுடைய மனதில் வருவதுஎங்களுக்கு புரிகிறது.
இந்த புலசா மீன் மிகவும் சுவையாக இருப்பதன் காரணமாக இந்த அளவு விலைக்கு விற்பனை ஆகிறது. இந்த வகை மீனில் ஒமேகா-3 நிறைந்து இருக்கிறது. இது நமது கண்களுக்கும் சருமத்திற்கும் நல்லது. எனவே, இதன் காரணமாக இந்த மீன்களை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…