இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தெரியுமா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் 1,08,71,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1,55,360 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 12,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி கண்டுபிடுக்கப்பட்டு விட்டது தானே இனி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அலட்சியமாக இருக்காமல், முறையாக சமூக இடைவெளிகளை பின்பற்றி கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை.