டெல்லியில் பொது இடங்களில் வைத்து குட்கா பான்மசாலா உபயோகிப்பவர்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா?
பொது இடங்களில் வைத்து குட்கா மற்றும் பான் மசாலா உபயோகிப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மக்கள் தொகை அதிகம் என்பதால் காற்று மாசு அதிக அளவில் காணப்படும் என்பது நாம் அறிந்ததுதான். கொரோனா வைரஸின் தாக்கமும் அங்கு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சில வாரங்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அங்கு காற்று மாசும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே டெல்லியில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் அவர்கள் கொரோனா வைரஸ் குறித்த ஒழுங்குமுறை 2020 என்ற தொற்றுநோய் மேலான் திருத்தத்தை தற்பொழுது கொண்டு வந்துள்ளார்.
அதன்படி தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை மீறுபவர்கள் மீதும் பொது இடங்களில் வைத்து பான்மசாலா குட்கா ஆகியவற்றை உட்கொள்வோர் மீதும் அரசு அங்கீகாரம் பெற்ற நபர்கள் 2000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.