5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவது எப்படி தெரியுமா? முழு விவரம்.!

ayushman card

Ayushman Bharat Yojana: மத்திய அரசின் கீழ் செயல்படும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சுகாதார உதவிகளை வழங்க பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்று அழைக்கப்படும் ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ என்ற திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, ஒரு நபர் இந்தியா முழுவதும் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சையைப் பெற்று கொள்ளலாம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு தகுதி உடையவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படுகிறது.

உயர்தர மருத்துவ சிகிச்சையை அணுக முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இத்திட்டத்தின் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்து ஆயுஷ்மான் பாரத் 2024 அட்டையை பெறுவதற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmjay.gov.in/ இல் சென்று விண்ணப்பிக்கவும்.

ஆயுஷ்மான் பாரத் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. பான் கார்டு எண்
  3. ரேஷன் கார்டு
  4. வாக்காளர் அடையாள அட்டை
  5. எஸ்சி சான்றிதழ்
  6. பட்டியல் பழங்குடியினர் சான்றிதழ்
  7. வருமானச் சான்றிதழ்
  8. கைபேசி எண்
  9. பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணைய தளமான https://pmjay.gov.in க்கு சென்று நீங்கள் பயன்பாட்டில் கேட்கப்படும் தகவலை அளிக்க வேண்டும், பின்னர் உங்களின் தகுதியை சரிபார்க்கவும். சரிபார்ப்புக்கு ஓடிபி எண்ணை பெற, உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

உங்கள் விண்ணப்பத்தை அரசாங்கம் சரி பரப்புக்கும், உங்கள் இலவச காப்பீடு திட்டத்தை பெறுவதற்கு காத்திருக்கவும். நீங்கள் விண்ணபித்த பின், உங்கள் விண்ணப்பத்தை சரிசெய்ய சில நாட்கள் தேவைப்படும், அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

உங்கள் விண்ணப்பம் 10 நாட்களுக்குள் சரி செய்து விட்டதாக உங்களுக்கு அஞ்சல் வரவில்லை என்றால், நீங்கள் உடனே அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க வேண்டும். சரியான விவரங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பிய பின், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆயுஷ்மான் அட்டையை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்