ஆனந்த் அம்பானி திருமணம் : பிரபல பணக்காரரான முகேஷ் அம்பானி தன்னுடைய இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் இன்று (ஜூலை 12 ஆம் தேதி) மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது.
இன்று தான் இவர்களுடைய திருமணம் என்றாலும் கூட கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால், உலக பிரபலமான ரிஹானா மற்றும் ஜஸ்டின் பீபர் போன்றவர்களை அழைத்து தங்களுடைய திருமண நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தினர் பாடல்களை பாட வைத்தனர்.
இவர்கள் வருவதற்கு சம்பளமாக பல கோடிகளை கொடுத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைப்போல, அம்பானி குடும்பத்தினர் அணிந்திருக்கும் வாட்ச் மற்றும் உடைகள் ஆகியவற்றின் விலை குறித்தும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இதனை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தற்போது இவர்களுடைய திருமண செலவு மொத்தமாக எவ்வளவு என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் கொடுத்த தகவலின் படி, ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மொத்தமாக ரூ. 4,000 கோடி முதல் 5,000 கோடி வரை ($0.6 பில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அடேங்கப்பா இவ்வளவா? என ஆச்சரியத்துடன் கூறிவருகிறார்கள்.
மேலும், இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், அடுத்ததாக நாளை ஜூலை 13 ‘மங்கள் உத்சவ் விழா’ மற்றும் ஜூலை 14 அவர்களின் திருமண வரவேற்பு விழாவும் நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…