இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரியுமா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,441 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 8,229,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 122,642 பேர் உயிரிழந்துள்ளனர், 7,542,905 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,441 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 493 பேர் நேற்று ஒரு நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 563,775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.