#AgnipathScheme:அக்னிபத் திட்டம் – எத்தனை லட்சம் பேர் விண்ணப்பம் தெரியுமா? – இந்திய விமானப்படை அறிவிப்பு!
முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இதனிடையே,இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் எரிப்பு, பொதுச்சொத்துக்கள் சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்துள்ளன.
ஒருபக்கம் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில்,மறுபுறம் அக்னிபத் திட்டதிற்கு இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அதன்படி, இந்திய விமானப்படையில் சேர முன்னதாக 6,31,528 பேர் விண்ணப்பித்தனர் என விமானப்படை தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 24 இல் தொடங்கிய விண்ணப்ப பதிவு நேற்றுடன் (ஜூலை 5 ஆம் தேதி) முடிவடைந்த நிலையில் இந்திய விமானப்படை இதனை தெரிவித்துள்ளது.
The online registration process conducted by #IAF towards #AgnipathRecruitmentScheme has been completed.
Compared to 6,31,528 applications in the past, which was the highest in any recruitment cycle, this time 7,49,899 applications have been received.#Agniveers pic.twitter.com/pSz6OPQF2V
— Indian Air Force (@IAF_MCC) July 5, 2022