பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக இந்தியா முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் நாளை முதல் 3 நாட்களுக்கு செயல்படாது மதுரை பாஸ்போர்ட் Regional அதிகாரி அறிவித்துள்ளார்.
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட். இந்த பாஸ்போர்ட் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பாஸ்போர்ட் பெறுவதற்கான செயல்முறை மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் நாடுகளுக்கு நாடு மாறுபடும். இப்படியான சூழலில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி (Regional Passport Officer) வசந்தன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்தியா முழுவதும் செப்.20ம் தேதி இரவு 8 மணி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பாஸ்போரட் விண்ணப்பதாரர்கள் பாஸ்போரட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது!#Passport | #PassportSeva | #Madurai #Passportseva #Passport #India pic.twitter.com/ikLnq5hW1q
— Dinasuvadu (@Dinasuvadu) September 19, 2024
இதற்கு முன்னதாக, கடந்த மாதம் இதே போன்று ஐந்து நாட்கள் இணையதள சேவை முடங்கியது. பின்னர், அது சரிசெய்யப்பட்டு பாஸ்போரட் விண்ணப்பிக்க தொடங்கினர். தற்பொழுது மீண்டும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக சேவை முடங்கியுள்ளது.