ஜூலை (2021) மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தெரியுமா…?
ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி பார்ப்போம்.
இந்த ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,
- ஜூலை 4 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 10 – இரண்டாவது சனிக்கிழமை
- ஜூலை 11 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 12 – திங்கள் – காங் (ராஜஸ்தான்), ரத் யாத்திரை (புவனேஸ்வர், இம்பால்)
- ஜூலை 13 – செவ்வாய் – பானு ஜெயந்தி (தியாகிகள் தினம்- ஜம்மு & காஷ்மீர், பானு ஜெயந்தி- சிக்கிம்)
- ஜூலை 14 – புதன் – ட்ருக்பா செச்சி (கேங்டாக்)
- ஜூலை 16 – வெள்ளி – வியாழன் – ஹரேலா பூஜா (டேராடூன்)
- ஜூலை 17 – சனி – கார்ச்சி பூஜை (அகர்தலா, ஷில்லாங்)
- ஜூலை 18 – ஞாயிறு
- ஜூலை 21 – புதன் – பக்ரீத் (நாடு முழுவதும்)
- ஜூலை 24 – 4-வது சனி
- ஜூலை 25 – ஞாயிறு
- ஜூலை 31 – சனிக்கிழமை – கெர் பூஜா (அகர்தலா)