5 சதவீதம் தெரியுமா? செய்தியாளர்களிடம் 5 விரலை காட்டிச் சென்ற சிதம்பரம்
5 சதவீதம் தெரியுமா? செய்தியாளர்களிடம் 5 விரலை காட்டிச் சென்றுள்ளார் சிதம்பரம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.
A quick reminder by @PChidambaram_IN on why he’s feared by the BJP govt. #ModiMadeEconomicCrisis pic.twitter.com/9XOdVf6saT
— Congress (@INCIndia) September 3, 2019
நேற்று சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் முடிந்த நிலையில் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அவரது சிபிஐ காவல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் சிதம்பரத்திடம் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சிதம்பரம் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டதை ‘5 சதவீதம்’என்று தனது சைகையில் தெரிவித்தார் .அதாவது 5 சதவீதம் தெரியுமா? உங்களுக்கு 5 சதவீதம் என்றால் என்ன நினைவிற்கு வருகிறது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.சிதம்பரம் இவ்வாறு கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.