உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு JN.1 இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் முதலில் பரவிய பிறகு, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனிடையே, மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் “JN.1 கொரோனாவிற்கு தடுப்பூசி தேவை இல்லை எனவும்,பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே மாநிலங்களுக்கு பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
ஓமிக்ரானின் இந்த புதிய துணை மாறுபாட்டின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் நிம்மதியான விஷயம். JN.1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சில சமயங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை இருக்கும். இவை பொதுவாக ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கைபடி, இந்தியாவில் 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 656 பேர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிக்சை பெறறு வருபவர்களின் எண்ணிக்கையை 3,742 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 5,33,333 ஆக உள்ளது என தெரிவித்தனர்.
முதன்முதலாக இந்தியாவில் கொரோனா பரவிய போது தற்காத்துக் கொள்ள தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி தடுப்பூசி 2 தவணையாக போடப்பட்டது. அதன்படி முதல் தவணையில் 95% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அடுத்து இரண்டாம் தவணையாக 88 சதவீத மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின்னர் 3-வது அலையில் பரவிய கொரோனா காரணமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த போஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டோர். முன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின்னர் இந்தியாவில் கொரோனா படிப்படியாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…