உடனுக்குடன் பட்ஜெட்2023-இன் முக்கிய அம்சங்களை அறிய இதனை செய்யுங்கள்…!
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலின் நேரடி ஒளிபரப்பு ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி, டிடி நியூஸ் ஆகியவற்றில் வருகின்ற பிப்ரவரி -1ஆம் தேதி அன்று காலை 11 மணியிலிருந்து ஒளிபரப்பாகவுள்ளது.
இதைப்போல, சில தனியார் தொலைக்காட்சி சேனல்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் விவரங்களை போனில் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்காக “Union Budget Mobile App” என்ற மொபைல் செயலியை நிதி அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
இந்த செயலியை உங்களுடைய போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு, இதன் மூலம், பட்ஜெட் ஆவணங்களின் முழுமையான தொகுப்பினை நீங்கள் அணுகலாம். இந்த “Union Budget Mobile App” செயலியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரைக்குப் பிறகு, முழு பட்ஜெட்டின் ஆவணமும் வெளியிடப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
Union Budget Mobile App -ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி ..?
இந்த Union Budget Mobile App (யூனியன் பட்ஜெட் மொபைல் ) செயலியை நீங்கள் பதிவிறக்கம் (install) செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். (www.Indiabudget.Gov.In) என்ற யூனியன் பட்ஜெட் இணைய தளத்திலிருந்தும் இந்த (யூனியன் பட்ஜெட் மொபைல் ) செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.