தமிழ்நாட்டை போலவே மத்திய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற சித்த ராமையா அம்மாநில சட்டமன்றத்தில் கோரிக்கை.
கர்நாடக மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா, சிஏஏ, வேளாண் சட்டங்கள் மற்றும் தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும் எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்ட 13 கோரிக்கைகளை பேரவையில் வலியுறுத்தினார்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேற்கோள்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா, தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர கலால் வரியை குறைக்கும் அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மாநில அரசு செஸ் மற்றும் இதர விற்பனை வரியை குறைக்கலாம். இதுபோன்று அண்டை மாநிலமான தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பெட்ரோல் மீதான வரியை ரூ.3 குறைத்துள்ளார்.
அதைபோல் கர்நாடக மாநிலத்திலும் நீங்கள் குறைக்க வேண்டும். தமிழகத்தை ஒப்பிடும்போது இங்கு அதிகமாக குறைக்க வேண்டும் என தெரிவித்தார். சட்ட பேரவையில் சித்த ராமையா கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பதிலளித்து பேசவுள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…