#N95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு
மக்கள் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட முகக்கவசங்களை உபயோகித்து வருகின்றனர். அதில் ஒன்று தான் N-95 எனும் சுவாச வால்வு பொருத்தப்பட்டுள்ள முகக்கவசம். இதை லட்சக்கணக்கான மக்கள் இதை வாங்கி உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்காது என்பதால் சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் N95 வகை முககவசங்களை தவிர்த்து பொதுமக்கள் பயன்படுத்தி வரும் N95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என த்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- முகக்கவசம் என்பது மூக்கு மட்டும் தான் துவாரங்களை மறைக்கும் விதமாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் துணி முக்கவசத்தை பயன்படுத்துவது நல்லது.
- துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட 95 மாஸ்க்குகளை சுகாதார பணியாளர்கள் தவிர்த்து மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.