கிருமிநாசினி தெளிக்கப்பட்ட சுரங்கபாதைகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா கிருமி நாசினி தெளிக்கக்கூடிய சுரங்க பாதைகளின் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப்பை சேர்ந்த குரு சிம்ரன் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கிருமி நாசினி தெளிக்க கூடிய சுரங்கத்தின் பயன்பாடு மருத்துவ ரீதியாகவும் மனோரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் இதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது என வாதிட்டுள்ளார். இதனை ஏற்று நீதிபதிகள் தீங்கை விளைவிக்கும் என்றால் ஏன் அதை தடை செய்யவில்லை? என கேள்வி எழுப்பினர். மேலும் கிருமி நாசினி தெளிக்க கூடிய சுரங்கங்களின் பயன்பாட்டை தடுக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…