விவசாயிகளின் போராட்டம் ஓய்ந்து விட்டது எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும் எனவும் நினைத்துவிட வேண்டாம் என விவசாய அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகப் போராடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டங்களை கையிலெடுத்து போராட்டங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தான் விவசாயிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துப்போவதாக தெரியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விவசாயிகள் அமைப்பாகிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் அவர்கள் பேசும்பொழுது, விவசாயிகளின் போராட்டத்தை கொல்கத்தா வரை கொண்டு செல்ல இருப்பதாக எச்சரித்துள்ளார்.
மேலும் பயிர்களின் விலை உயர்த்தப்படவில்லை ஆனால் பெட்ரோல் டீசல் விலையை மட்டும் நாளுக்கு நாள் உயர்த்துகிறார்கள். இப்படிப்பட்ட பாதையில் அரசு சென்று கொண்டு இருந்தால் நாங்கள் எங்கள் டிராக்டர்களை நேரடியாக மேற்கு வாங்க தேர்தல் களத்துக்கு கொண்டு சென்று விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முனைப்பு காட்டினீர்களானால் பயிர்களை எரித்து விடுவோம் எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் போராட்டம் தான் எங்கள் போராட்டம் எனவும் நீங்கள் நினைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். அறுவடையும் செய்வோம், போராட்டமும் நடத்துவோம் என கூறிய அவர், விவசாயிகள் மீண்டும் பயிர் தொழிலுக்கு செல்வோம் என்ற தவறான கண்ணோட்டத்தை தங்கள் மீது ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…