லேசான கொரோனா அறிகுறி இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம்…! புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது …! – எய்ம்ஸ் இயக்குனர்
ஒரு தடவை நாம் சிடி ஸ்கேன் எடுப்பது 300 முதல் 400 முறை வரை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைய பல வழிகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், கொரோனா பரிசோதனை கருவிகளில் கொரோனா அறிகுறி இல்லாதாவர்கள், சிடி ஸ்கேன் எடுத்து, கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.
இதுகுறித்து, எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், இதுவரை மேற்கொள்ளபட்ட ஆய்வில், 30-40 சதவிகிதம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிடி ஸ்கேன் எடுத்தும், சிலருக்கு கொரோனா சிகிச்சை தேவையில்லை என்ற நிலை ஏற்படுகிறது.
மேலும், ஒரு தடவை நாம் சிடி ஸ்கேன் எடுப்பது 300 முதல் 400 முறை வரை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளது. இளைஞர்களை பொறுத்தவரையில், அடிக்கடி உடலில் நுண்கதிர்கள் படும் போது, எதிர்காமத்தில் பல்வேறு பிராச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, கொரோன அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்,முதலில் எக்ஸ்ட்ரே எடுத்து பாருங்கள், பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சிடி ஸ்கேன் எடுத்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.