பொய் பிரச்சாரத்தை பரப்பாதீர்கள் சித்தார்த்க்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்.!
- குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த் பொய் பிரசாரம் செய்கிறார் என்று காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
- பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவதும், சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை.
குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தனது டுவிட்டர் பதிவில் எனக்கும், என் அன்பார்ந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றும் கணக்குகளிலிருந்து டுவிட்டுகள் மூலம் கைது செய்வோம் என்று மிரட்டல் வருகின்றன. பின்னர் சுதந்திரமான தேசத்தில் எங்கள் மனதில் இருப்பதை பேச முயற்சிக்கிறோம். இதனால் அசிங்கமான வார்த்தைகளும், கடுமையான சட்டங்களும் எதிர்ப்புக் குரல்களை நெரிக்க முடியாது. மேலும் எதிர்ப்பையும் மீறி நாங்கள் நிலைபோம், என்று கூறி ஜெய்ஹிந்த்” என தெரிவித்து இருந்தார்.
சித்தார்த்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவதும், சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்பு தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை. பொய்யான செய்திகள் மூலம் அமைதியைக் கெடுப்பதும் அல்லது பொது மக்களைத் தொந்தரவு செய்வதும், அவர்களைத் தூண்டுவது போன்ற எல்லாம் செயல்களும் கண்டிக்கத்தக்கது. தீவிரமான பொதுப் பிரச்சினையில் பொய் சொல்வதும், மக்களின் அமைதியைக் குலைப்பதும் ஜனநாயகம் அல்ல.
மேலும் இந்தச் சட்டம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள், அதில் சட்ட ரீதியாக ஏதாவது தவறு என்று தெரிந்தால் அதை சட்ட ரீதியாகவே நிரூபியுங்கள். பின்பு அதன் பிறகு அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டலாம் என்றும் மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். மற்றும் சமூக ஊடகத்தில் மக்களைத் தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றால், பொய்யான பிரச்சாரம் எச்சரிக்கப்படும். எல்லா பிரபலங்களும் புத்திசாலிகள் என்றும் அவர்கள் சொல்வது சரி என மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் மீது பொய் திணிக்கப்படுகிறது. இதனால் மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர், மற்றும் கவலையும் படுகிறார்கள், என்று குறிப்பிட்டுருந்தார்.