இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியே செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த கட்டடங்கள் ஆகியவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழகம் உட்பட சில இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் என்ற பெயரில் பாதை அமைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், தனி நபர்கள், குழுக்கள் மீது எந்த சூழ்நிலையிலும் கிருமி நாசினி தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், ரசாயனம் கலந்த கிருமி நாசினிகளை தெளிப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…