குடிபோதைக்கு அடிமையான ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்காதீர்கள்.! மத்திய இணையமைச்சர் வேதனை.!
மதுகுடிப்போர் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஆண்களுக்கு தயவு செய்து உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள். – மத்திய இணையமைச்சர் கவுஷல் கிஷோர்.
உத்தரபிரதேச மாநிலம் லம்புவா பகுதியில் போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார இணையமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்துகொண்டார்.
அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு, நண்பர்கள் மூலம் மதுப்பழக்கம் ஏற்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவித்தான். அதன் பிறகு எனது மகனை போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம். அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து எனது மகனுக்கு திருமணம் செய்துவைத்தோம். என கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஆனால் திருமணத்துக்குப் பிறகும் எனது மகன் மீண்டும் குடிக்கத் தொடங்கிவிட்டான். 2 வருடங்களுக்கு முன்னர் அந்த குடிப்பழக்கத்தால் எனது மகன் இறந்து போனான். அப்போது எனது பேரனுக்கு 2 வயதுகூட நிரம்பவில்லை.’ என வேதனையுடன் மத்திய இணையமைச்சர் கவுஷல் கிஷோர் கூறினார்.
அதன் பிறகு பேசிய கவுஷல் கிஷோர், ‘ மதுகுடிப்போர் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஆண்களுக்கு தயவு செய்து உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள். போதைக்கு அடிமையாக இருக்கும் ஒரு அதிகாரிக்கு திருமணம் செய்து வைப்பதை காட்டிலும், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளிக்கு திருமணம் செய்து வைப்பதே சிறந்தது. என தனது வருத்தம் கலந்த கோரிக்கையும் முன்வைத்தார் இணையமைச்சர் கவுஷல் கிஷோர்.