நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேட்டியளிக்க கூடாது – தலைமை நீதிபதி உத்தரவு!
நிலுவை வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு.
தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து 4 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மேற்கு வங்காளத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அவரது பெஞ்ச் மூலம் தீர்ப்பளிக்கப்பட்டு, தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிபதிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தல், அவர்களால் வழக்கை விசாரிக்க முடியாது. அதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம் என்று நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அடங்கிய அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது.