புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை செயல்படுத்த கூடாது-உச்சநீதிமன்றம்
கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தது.ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு புதுச்சேரி மாநில அமைச்சரவை முடிவை அமல்படுத்த தடை விதித்தது உச்சநீதிமன்றம் .வரும் 7ஆம்தேதி நடைபெற உள்ள புதுச்சேரி அமைச்சரவை முடிவை அமல்படுத்த தடை விதித்தது.மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.