சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்-அமலாக்கத்துறை வாதம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள் என்று அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை இன்று வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.இது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா அமர்வு விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார்.அவர் வாதிடுகையில், சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களின் வழக்குகளை பாதிக்கும், சிதம்பரம் முன்பு தலைமறைவாக இருந்தவர்.அவர் தான் இப்போது முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
சிதம்பரத்திடம் நாங்கள் நேர்காணல் செய்ய விரும்பவில்லை. அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க விரும்புகிறோம்.வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை வைத்து விசாரணை நடத்தவுள்ளோம் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விட தப்பிக்கவே அதிகமாக ப.சிதம்பரம் முயற்சி செய்தார்.தயவுசெய்து சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள் என்று வாதிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)