புதுச்சேரி மக்களே! ” இன்று இரவு முதல் நாளை வரை வெளியே வர வேண்டாம்”…அரசு அறிவுறுத்தல்!
பொதுமக்கள் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த “ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது.
கடற்கரையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ நிலை கொண்டுள்ளது. ஏற்கனவே, இது கரையை கடக்க தொடங்கிய நிலையில். 3 முதல் 4 மணி நேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசி கரையை முழுவதுமாக தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புயலானது புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதன் காரணத்தால் அங்கு அதி கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சுழலில், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும், அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் பபுதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்கள் இன்று இரவு 8:00 மணி முதல் நாளை அதிகாலை வரை அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, அரசு அறிவுறுத்தலின் படி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.