ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் தொடர்ந்து 4-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்றும், கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், கிருமிநீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும். கட்டிடம் போதுமான அளவு கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியை தொடங்க ஏற்றதாக அறிவிக்கப்படும் வரை, அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் அலுவலகம் செல்லக்கூடாது. உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…