“ரயில்களில் இதெல்லாம் கொண்டு வர வேண்டாம்” – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!
ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது.
டெல்லி : தீபாவளியை முன்னிட்டு, உங்கள் பண்டிகை பயணத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில், எளிதில் தீப்பற்ற கூடிய அல்லது பட்டாசுப் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வது, ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67 இன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனைக்குரியதாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீபாவளி, உங்கள் பண்டிகை பயணத்தை பாதுகாப்பாக மாற்றுங்கள்! ரயிலில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம்.#SafeTravel #DiwaliSafety #TrainJourney #DiwaliCelebration #NoFirecrackers #SafetyPrecautions #TamilNaduRailways #SouthernRailway pic.twitter.com/XAxsDmI9XU
— Southern Railway (@GMSRailway) October 23, 2024
அதையும் மீறி, ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால், அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று ரயில்வே காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அந்த வகையில், பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், நவீன ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அவ்வாறு செயல்பாடுகளில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, 5,000 ரூபாய் அபராதம் என ரயில்வே பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.