“அலட்சியம் காட்டாமல், விழிப்புடன் இருங்கள்” – பிரதமர் மோடி
கொரோனா காலகட்டத்தில் ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி தற்போது உரையாற்றினார்.
டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் உரையாற்றிய போது, கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது கண்டு பலர் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம். மேலும், கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.