அச்சம் வேண்டாம்…புதிய வகை XE கொரோனா இந்தியாவில் இல்லை – மத்திய அரசு!
மும்பை:தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்.10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனா அறிகுறி இல்லை என மத்திய அரசு அறிவிப்பு.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி,டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனாவை விட 10 மடங்கு வேகமாகப் பரவும் XE வகை கொரோனா பிரிட்டன் உட்பட சில நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில்,இந்தியாவில் மும்பையிலும் ஒருவருக்கு இருப்பதாக மும்பை மாகராட்சி கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில்,மும்பையில் புதிய வகை XE என்ற கொரோனா கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.சந்தேகத்திற்குரியவரின் மாதிரியை ஆய்வு செய்ததில் அது XE வகை கொரோனாவுடன் ஒத்துப்போகவில்லை எனவும்,XE இருப்பதாக கூறப்பட்ட 50 வயது பெண் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்.10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனாவின் அறிகுறிகளோ,இணை நோய்களோ இல்லை எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Evidence doesn’t suggest presence of XE COVID variant in India, says Health Ministry
Read @ANI Story | https://t.co/z9mbBMMuFS#XECovid #COVID19 pic.twitter.com/KiRlTtWvUG
— ANI Digital (@ani_digital) April 6, 2022