உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம்..! தேவசம்போர்டு முடிவு
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எற்க மறுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.அதேசமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு வரவேற்றுள்ளது.
இந்நிலையில் தேவசம்போர்டு தலைவர் ஏ. பத்மகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.