பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட புதிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த கட்டுப்பாட்டில் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிகளும் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட கூடாது என்று ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து, நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாட்டில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் சில மாநிலங்களில் 100% மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக புதிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா? என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றுள்ளது.
மேலும், ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நேரடி வகுப்புக்கு மாறுதலின் போது மாணவர்களின் சிரமத்தை போக்க இணைப்பு வகுப்புகள் நடத்தவும், கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு உரிய உதவியை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு மாணவரும் பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதை உறுதிசெய்தல், மற்றும் தீர்வுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…