டெல்லியில் திமுக புதிய அலுவலகம் – இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

டெல்லி:மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில்,பிரம்மாண்டமாக திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள்,3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
தலைவர்களுக்கு அழைப்பு:
இதனையடுத்து,பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
திமுக அலுவலகம் இன்று திறப்பு:
இந்நிலையில்,டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,திமுக அலுவலகத்தை(அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை) திறந்து வைக்கிறார்.அதன்பின்னர் அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைகளையும்,பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025