ரூ.33,000 to 93,000.? திடீரென உயர்ந்த விமான டிக்கெட் விலை.! தயாநிதி மாறன் அதிர்ச்சி.!
டெல்லி: திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்றத்தில் விமான டிக்கெட் உயர்வு குறித்து மக்களவையில் கோரிக்கை முன்வைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதற்கடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.
இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், விமான டிக்கெட் உயர்வு பற்றி தெரிவித்தார். மேலும், தான் விமான டிக்கெட் புக் செய்யும் போது நிகழ்ந்த சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதில், ” தான் வழக்கமாக டெல்லி வருவதற்கு ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்வேன்.
நான் தனியார் செயலி மூலம் டிக்கெட் புக் செய்ய முயன்றேன். அப்போது டிக்கெட் விலை 33 ஆயிரம் ரூபாய் என இருந்தது. நான் பணம் செலுத்தும் கட்டத்திற்கு வந்த உடன் சேவை நிறுத்தப்பட்டது. உடனே மீண்டும் முயற்சித்த போது டிக்கெட் விலை 93 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. சில நிமிடங்களில் 70 ஆயிரம் ரூபாய் உயர்ந்துவிட்டது. விமான நிறுவனங்கள் திடீர் திடீர் என விமான டிக்கெட் உயர்கிறது.” என திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் குற்றம் சாட்டினார்.
அப்போது விமானத்துறை அமைச்சர் ராம் மோகன், தயாநிதி மாறன் கூறிய விமான டிக்கெட் உயர்வு புகார் எடுத்துக்கொள்ளப்பட்டு, விமான டிக்கெட் உயர்வது கண்காணிக்கப்படும் என கூறினார்.