சித்தராமையாவை தொடர்ந்து டெல்லி செல்கிறார் டி.கே.சிவக்குமார்!!
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்துமுடிந்த காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஒரு பக்கம் முதலமைச்சராக டி.கே. சிவகுமாரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், மற்றோரு பக்கம் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா 2-வது முறையாக முதல்வராக வேண்டும் என தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும், கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என நேற்றிரவு 2 மணி வரை நீடித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லிக்கு வந்தடைந்தார்.
சித்தராமையா காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார். அவரை தொடர்ந்து டி.கே. சிவகுமாரும் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய அவர் ” இன்று எனது பிறந்தநாளான இன்று நான் என் குடும்பத்தினரை சந்திக்கிறேன். அதன்பிறகு, நான் டெல்லிக்கு செல்கிறேன். எனது தலைமையில், 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் ஒரே குரலில் (முதலமைச்சரை நியமிக்கும்) விஷயத்தை கட்சி மேலிடத்திற்கு விட வேண்டும். அவர்கள் அறிவிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
#WATCH | It’s my birthday today, I’ll meet my family. Afterwards,I’ll leave for Delhi.Under my leadership,we’ve 135 MLAs, all in one voice said-matter (to appoint CM) is to be left to the party high command. My aim was to deliver Karnataka&I did it: K’taka Cong Pres DK Shivakumar pic.twitter.com/xlqvVCBLdv
— ANI (@ANI) May 15, 2023