தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாகன கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான பணிகளுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு விதித்தது.
மேலும், காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த ஐஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுடன் உதவியுடன் செயற்கை மழை பொழிவை உருவாக்கவும் மாநில அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கிடையில், டெல்லியில் இயற்கை மழை பொழிந்து ‘மிகமோசமான’ எனும் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் தரத்திற்கு வந்தது.
ஹரியானாவில் கள்ள சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு.. 7 பேர் கைது..!
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CCB) தரவின் படி, நச்சு நிறைந்த மூடுபனி டெல்லியை சூழ்ந்து மற்றும் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான அளவீட்டை பெற்றது.
இன்று காலை 6 மணி நிலவரத்தின் படி, டெல்லி பவானாவில் AQI 434ஆகவும், துவாரகா பகுதியில் 404ஆகவும், ITO பகுதியில் 430ஆகவும், முண்ட்காவில் 418ஆகவும், நரேலாவில் 418ஆகவும், ஓக்லாவில் 402ஆகவும், ரோகினி மற்றும் ஆர்கே புரம் இரண்டிலும் 417ஆகவும் இருக்கிறது.
இந்த அளவீட்டின்படி தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் பிரிவில் இருந்ததை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.
டெல்லியில் தீபாவளி அன்று மாசு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் வேறு மாசு ஏற்படுத்தும் வகையில் தீபம் ஏற்றத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொதுமக்கள் அதனை மீறி செயல்பட்டதால் இதுபோன்று காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்றின் தரம் 0 முதல் 50க்கும் இடைப்பட்ட அளவீடு ‘நல்லது’, 51 மற்றும் 100 ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 ‘மிதமானது’, 201 மற்றும் 300 ‘ஏழைகள்’, 301 மற்றும் 400 ‘மிக மோசமானது’, 401 மற்றும் 450 ‘கடுமையானது’ மற்றும் 450க்கு மேல் ‘கடுமையான பிளஸ்’.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…