நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு புராண கதைகள் வழியாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டாலும் , அனைத்து கதைகளும் ஒரே நாளில் அமைந்து இருப்பது ஆச்சர்யமான உண்மை.
5 நாள் திருவிழவாக வெவ்வேறு மத சடங்குகள் உடன் வடமாநிலங்கள் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி மறுநாளான இன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் மத சடங்குகளை மேற்கொள்கின்றனர்.
வெவ்வேறு இடங்கள்.. வெவ்வேறு கொண்டாட்டங்கள்.. ஒரே ஒரு தீபாவளி பண்டிகை.!
உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தெஹ்சில் பிடவாட் கிராமத்தில் இந்த திருவிழா நடைபெற்றது. அப்போது மாடுகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், சில நபர்கள் அதன் முன் படுத்து விடுகின்றனர்.
அப்போது கீழே படுத்து இருந்து நபர்கள் மீது அந்த அலங்கரிக்கப்பட்ட மாடுகள், கன்றுக்குட்டிகள் ஓடுகின்றன. மாடுகளை தங்கள் மீது மிதித்து ஓட விடுவதன் மூலம் தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…