தீபாவளி கொண்டாட்டம்: எல்லா வீடுகளிலும் ஜெகஜோதியாக ஒளிரும் அகல் விளக்கு.!

diwali 2023 decoration

தீபாவளி என்பது நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கோலாகலமான பண்டிகை ஆகும். இந்த தீபாவளி வரும் நவம்பர் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ம் நாள் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு பலகாரங்கள் செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வர். முக்கியமாக, அந்நன்நாளில் பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில், பண்டிகைக் காலம் என்றாலே வீடுகளை அழகான அலங்காரங்களால் அலங்கரிக்கும் காலமாகும். தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை பண்டிகை வருகிறது. இந்நிலையில், தீபாவளி அன்று தமிழ்நாட்டில் அகல் விளக்கு ஏற்றி கொண்டாடுவார்களா என்று தெரியவில்லை.

ஆனால், வட மாநிலங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுவார்கள். இந்த முறை இந்த ஒளியின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையை, மகிழ்ச்சி நிறைந்த உங்கள் வீட்டை தீபம் நிறைந்த அலங்காரம் செய்து இந்த தீபாவளியை கொண்டாடுவோம்.

முஹுரத் வர்த்தகம் 2023: தீபாவளி நாளின் சிறப்பு வர்த்தகம்.! எப்போது தொடக்கம்..முழு விவரம் இதோ.!

விளக்குகள்

நம் வீட்டை அலங்காரம் செய்து அழகு பார்க்க முதலில் மங்களகரமாக விளக்குகளில் இருந்து தொடங்கலாம். அதில் பாரம்பரிய மண் விளக்குகள் தீபாவளிக்கு முக்கியம், இது வடமாநிலங்களில் பாரம்பரியமாக வீடு முழுக்க தீபம் ஏற்றி வீட்டை வண்ணம் மிகுந்து ஒளிரச்செய்வார்கள்.

அதுபோல், நாம் இந்த முறை நம் வீட்டில் அகல் விளக்குகளை ஏற்றி இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடி தீர்ப்போம். மேலும், அந்த விளக்குகளை உங்கள் வீட்டில் கோலமிட்டிருக்கும் வடிவத்திற்கு ஏற்ப வரிசை கட்டி வைத்தால் கூடுதல் அழகு கூடி வரும்.

#Diwali2023 : தீபாவளியை சரவெடியாக கொண்டாட வெளியாகும் 3 படங்கள்! எல்லாமே சூப்பர் தான்…

மின் விளக்குகள்

விளக்கு ஏற்றுவதை தாண்டி, வீடு முழுக்க மின் விளக்குகளால் அலங்கரித்து, கூடுதல் கொண்டாட்டத்தை சேர்க்க, வீட்டு மாடிகளில் சின்ன சின்ன மின் விளக்குகளை ஒளிர செய்து இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.

மெழுகுவர்த்தி

மண் விளக்குகள் வேண்டாம் என்று நீங்கள் நினைதால், கலர்கலர் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தி வீட்டின் வாசலை கண்கவர செய்யலாம். வீட்டின் வாசல் மற்றும் பூஜையறை முன்பு கோலமிட்டு அதன் மீது மெழுகுவர்த்தியை பொருத்தி வைப்பதால் மேலும் சிறப்பாக மாற்றலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்