களைகட்டும் தீபாவளி! “கல்லா கட்டிய தங்கம்”..ஒரே நாளில் இத்தனை கோடிகளுக்கு விற்பனையா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டும் சுமார் ரூ. 2,500 கோடி மதிப்புக்கு வெள்ளியும் விற்பனையாகி இருக்கிறது.
புது தில்லி : தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது என்றாலே மக்கள் புதுத்துணி எடுப்பது மட்டுமின்றி தங்கம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவது உண்டு. தமிழகத்தில் தீபாவளிக்கு முந்திய நாட்களில் மக்கள் தங்கம் வாங்குவது போல, வட மாநிலங்களில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதல்நாளாக கொண்டாடப்படும் “தந்தேரஸ் பண்டிகை” அன்று தங்கம் வாங்க இந்த சமயங்களில் நகை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
தந்தேரஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விழா, அக்டோபர் 29, செவ்வாய்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த நன்னாளில் மக்கள் அதிகமாக தங்கம் வாங்குவதால் தங்கம் விற்பனை கடைகள் வைத்து இருக்கும் கடைகளிலும் அமோகமான வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில், இன்று மட்டும் மொத்தமாக நாடு முழுவதும், ரூ. 20,000 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ. 2,500 கோடி மதிப்புக்கு வெள்ளியும் விற்பனை செய்யப்பட்டதாக ஆச்சர்ய தகவலை ஏஐடியின் பொதுச் செயலாளரும் சாந்தினி சௌக்கின் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” இந்த ஆண்டு தங்கம் வாங்க அதிகமான டிமாண்ட்கள் இருந்தது. சுமார் 25 டன் தங்கம் இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதில் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.20,000 கோடி அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது. அதைப்போல, வெள்ளி இந்த ஆண்டு மொத்தமாக 250 டன் வெள்ளி விற்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் சுமார் ரூ. 2,500 கோடி மதிப்புக்கு வெள்ளியும் விற்பனையாகி இருக்கிறது. இந்த சமயத்தில் மக்கள் பலரும் வெள்ளி நாணயங்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் ஒரு நாணயம் ரூ.1,200 முதல் ரூ. 1,300 வரை விலையில் உள்ளது” எனவும் தெரிவித்தார்.
டெல்லியில், மிகவும் பிரபலமாக இருக்கும் தங்கம் விற்பனை செய்யும் கடைகளான சதர் பஜார், கமலா நகர், அசோக் விஹார், ரஜோரி கார்டன், துவாரகா, ஜனக்புரி,தரிபா கலன், மாடல் டவுன், உள்ளிட்ட கடைகளில் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நாளில் மக்கள் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுவதே அதிர்ஷ்டத்தையும் தருகிறது என்பதால் தான். எனவே, வருடம் வருடம் இந்த நாள் வந்துவிட்டது என்றால் தங்கம் விற்பனை தொகை எங்கேயோ சென்றுவிடும். கடந்த ஆண்டு 12,000 கோடிக்கு அதிகமாக விற்பனை ஆன நிலையில், இந்த ஆண்டு அதை விட இந்த நாளில் விற்பனை ஆகியுள்ளது.
மேலும், “தந்தேரஸ் பண்டிகை” முன்னிட்டு தங்கம் மட்டும் 20,000 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது போல, இந்தியா முழுவதும் இன்று மட்டும் மொத்தமாக 60,000 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.