இந்தியாவில் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த தீபத் திருவிழாவை, அதாவது தீபாவளியை கொண்டாடும் தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது.
அந்தவகையில், தீபாவளி பண்டிகையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மகிழ்ச்சியான நிகழ்வு எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி கொண்டாட்டங்கள் என்ன என்பதை குறித்து இதில் நாம் பார்க்கலாம்.
வட இந்தியாவில், தீபாவளி மிகவும் உற்சாகமாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளன்று மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து, எண்ணெய் விளக்குகளை ஏற்றி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இனிப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்வது ஒரு பொதுவான பாரம்பரியமாகும். மேலும் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானை வழிபடுவார்கள்.
தென் மாநிலங்களில் தீபாவளி சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வீடுகளை வண்ணமயமான ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாலட்சுமி தேவியை வரவேற்க எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. மக்கள் புதிய ஆடைகள் அணிந்து, பலவிதமான இனிப்புகள் மற்றும் காரமான திண்பண்டங்களை தயார் செய்து, கடவுளுக்கு படைப்பார்கள். மேலும், பட்டாசு வெடிப்பது இங்கு பொதுவான நடைமுறையாகும்.
மகாராஷ்டிராவில் பசுக்களையும், கன்றுகளையும் வணங்கும் நாளான வசு பராஸுடன் தீபாவளி பண்டிகை தொடங்குகிறது. மக்கள் எண்ணெய் குளியல் மற்றும் புதிய ஆடைகளை அணியும் போது இந்த திருவிழா நரக சதுர்தசி வரை நீட்டிக்கப்படுகிறது. முக்கியமாக தீபாவளி நாள் லக்ஷ்மி பூஜையால் கொண்டாடப்படுகிறது. மேலும் இது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவை கொண்டாடும் நாளான பாவ் பீஜுடன் முடிவடைகிறது.
மேற்கு வங்கத்தில், தீபாவளி காளி பூஜையுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகள் லட்சுமி தேவியை வழிபடும் போது, வங்காளிகள் தீமையை அழிக்கும் காளி தேவிக்கு மரியாதை செலுத்துவார்கள். மேலும், சிலை ஊர்வலங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்து கொண்டாடப்படும். இதுபோன்று, ஒடிசாவில், விளக்குகள் மற்றும் வண்ணமயமான களிமண் ரங்கோலிகளுடன் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டம்: எல்லா வீடுகளிலும் ஜெகஜோதியாக ஒளிரும் அகல் விளக்கு.!
ராஜஸ்தானில் தீபாவளி பண்டிகை, நாட்டுப்புற இசை மற்றும் நடனத்திற்கு பிரபலமானது. பெண்கள் பாரம்பரிய ‘கூமர்’ நடனம் ஆடுகிறார்கள், மேலும் மாநிலம் முழுவதும் வண்ணமயமான விளக்குகளால் ஒளிரும்.
பஞ்சாபில் தீபாவளி பண்டி சோர் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது. இது குரு ஹர்கோவிந்த் ஜி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை குறிக்கிறது. சீக்கியர்கள் பொற்கோயில் மற்றும் அவர்களது வீடுகளில் மின்விளக்குகள் ஒளிரும். மேலும் குர்பானி கீர்த்தனையின் இனிமையான ஒலிகள் நிரம்பி காணப்படும்.
குஜராத்தில், தீபாவளி குஜராத்தி புத்தாண்டுடன் ஒத்துப்போகிறது. இதனால், அங்கு மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. பிரார்த்தனைகள் மற்றும் கோயில்களுக்குச் செல்வதன் மூலம் பண்டிகை நாள் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பரிசுகள் மற்றும் இனிப்புகள் பரிமாறப்படுகின்றன. மேலும், மக்கள் பாரம்பரிய கர்பா மற்றும் தண்டியா நடனத்தில் ஈடுபடுவார்கள்.
அசாம் மாநிலத்தில் தீபாவளியை கடி பிஹு என்று கொண்டாடுகிறது. மக்கள் மண் விளக்குகளை ஏற்றி, பிரசாதம் விநியோகிக்கிறார்கள், மற்றும் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள். இந்த திருவிழா அறுவடை காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது என கூறப்படுகிறது. எனவே, இதுவே தீபாவளியை இந்தியாவில் பல்வேறு இடங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதாகும்.
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில்,…
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…