தீபாவளி பற்றி நமக்கு தெரியாத வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்கலாமா?!

Default Image

தீபாவளி எப்படி உருவானது என பலருக்கும் பலவிதமான எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானோர் நினைத்துக்கொள்வது நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள் என்பதுதான். மேலும், சிலருக்கு நரகாசுரன் பூமாதேவியின் மகன் என்பது வரை தெரிந்திருக்கும்.
இந்த வரலாறை கொஞ்சம் ஆழமாக தேடி பார்த்ததில், நமக்கு தெரிந்தது என்னவென்றால், இரணியரக்ஷன் என்ற ராட்சசன் வேதங்கள் அனைத்தையும் பூமியில் ஆழமான பகுதிக்கு கொண்டு சேர்த்து அதனை புதைத்து வைத்ததாகவும், அதனை மீட்பதற்காக கிருஷ்ணர் பூமிக்கடியில் சென்று வேதங்களை மீட்டு வந்ததாகவும், அப்போது கிருஷ்ணருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்தான் பௌமன். இவன் தான் பின்னாளில் நரகாசுரன் என மக்களால் அழைக்கப்படும் பெரிய அரக்கானாக இருந்து வந்தான் என கூறப்படுகிறது.
இந்த நரகாசுரன், அடர்ந்த காட்டில் கடுமையான தவம் புரிந்தான். அப்போது பிரம்மனின் அருள் பெற்றான். அதன்படி பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நிகழ்ந்து விடக்கூடாது என வரத்தை பிரமன் பிரம்மனிடமிருந்து நரகாசுரன் வரமாக பெற்றுக் கொண்டான்.
அதன் பின்னர் அவனது அரக்கத்தனம் இன்னும் அதிகமானது. ஆதலால் அவனை வதம் செய்வதற்காக கிருஷ்ணர் புறப்பட்டார். அப்போது, பூமாதேவி சத்தியபாமா எனும் பெயரில் பூலோகத்தில் அவதரித்து இருந்தாள். சத்யபாமா போர்க் கலையில் வல்லவராக இருந்து வந்துள்ளார். அந்த சமயம் கிருஷ்ணர் நரகாசுரன் உடன் போர் புரியும் செய்தி அறிந்து நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். தான் வைத்திருந்த வில்லினால் நரகாசுரனை நோக்கி அம்பு எய்தாள்.
அந்த அம்பின் தாக்கத்தால் நரகாசுரன் மரணமடைந்தான். பிறகுதான் தெரிந்தது நரகாசுரன் தான் தனது புதல்வன் எனவும்,  இறந்தபோது அதே வேளையில் பூமாதேவியின் மறு உருவமாக பிறந்திருந்த சத்யபாமா தான் தனது தாய் எனவும் நரகாசுரனுக்கு தெரியவந்தது.
பிறகு சத்தியபாமா தன் மகன் இறந்த நாளை அனைவரும் சுக நாளாக கொண்டாட வேண்டும் எனவும், இறந்த வீட்டில் நடக்கும் எண்ணெய் குளியல் அனைவரது வீட்டிலும் சுப நிகழ்ச்சியாக நடைபெற வேண்டும் எனவும், அன்றைய தினம் கங்காதேவி அனைவரது வீட்டிலும் குளியலில் பரவ வேண்டும் எனவும், அப்படியே கிருஷ்ணர் வரமளிக்க, அன்றைய நாள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி பட்டாசு வெடித்து எண்ணெய் குளியல் என கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k