போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து -முன்னாள் முதல்வர் மனைவி பேச்சு ..!

மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்ததாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார்.
முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும் , அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் பட்னாவிஸின் மனைவி அம்ருதா இன்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தியாளர் சந்திப்பு வைரலாக பரவி வருகிறது. காரணம் அவரின் கருத்து, மும்பையில் நடக்கும் மொத்த விவாகரத்துகளில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்ததாக பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நானும் ஒரு சாதாரண குடிமகன் தான். தினமும் பயணம் செய்கிறேன் ஆனால் போக்குவரத்து நெரிசலால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். மும்பையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால், 3 சதவீத விவாகரத்துகள் நடைபெறுகிறது.
மும்பையில் இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன. அங்கு அரசு கவனம் செலுத்தவில்லை என்றார். மும்பையில் சாலை, போக்குவரத்து பிரச்னை உள்ளது. இதையெல்லாம் தவிர்த்து பாக்கெட்டை நிரப்புவதில்தான் அரசின் கவனம் உள்ளது என்று தெரிவித்தார்.
அம்ரிதா ஃபட்னாவிஸின் குற்றச்சாட்டுகளுக்கு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் பதிலளித்துள்ளார். மும்பையின் சாலைகள் சீராக இருப்பதாக நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் தகவல் கிடைத்தவுடன் சாலைகள் சீரமைக்கப்படும் என்றார். போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து செய்ததாக கூறுவது முற்றிலும் தவறானது என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025