தூக்கிலிடுவதற்கு முன் விவாகரத்து கொடுங்கள்.! நிர்பயா குற்றவாளி மனைவி.!
டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை மூன்று முறை தள்ளிப்போனது. அதனால் அனைத்து மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் தூக்கி உறுதி செயப்பட்டுள்ளது
இந்நிலையில் அக்சய் குமார் சிங் மனைவி தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவர் அளித்த மனுவில், நாளை மறுநாள் எனது கணவர் தூக்கிலிடப்பட்ட்டால் நான் விதவை ஆகிவிடுவேன். அதனால் கணவரை தூக்கிலிடுவதற்கு முன் எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறியுள்ளார்.