ஆந்திராவில் மாவட்டங்களுக்கிடையே அரசு பேருந்துகள் இயக்கம்.!
ஆந்திராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக குறையாததால் 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுப்போக்குவரத்து சேவை , அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்தும், ஒத்திவைத்தும் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இதுவரை 2532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 1621 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 52 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், ஆந்திராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில்லாத மண்டலங்களில் முதல் கட்டமாக 1,683 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்ததாக நேற்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.