மாவட்ட நீதிபதி கொலை.., உச்சநீதிமன்றம் விசாரணை..!
ஜார்கண்ட் மாநில நீதிபதிகொலை தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் நடைபயிற்சிக்காகச் சென்ற மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் சாலையோரம் உயிரிழந்து கிடைந்தார். நீதிபதி வாகனம் இடித்து உயிரிழந்திருக்கக் கூடும் என காவல்துறை முதலில் கருதினர். பின்னர், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நீதிபதி உத்தம் ஆனந்திற்கு அருகில் வந்த சிறிய ரக சரக்கு வாகனம் அவர் மீது இடித்துவிட்டு அதிவேகமாக சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி உயிரிழந்ததைக் கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. மாவட்ட நீதிபதி கொலை குறித்து ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டறிந்துள்ளார்.