சத்தீஷ்கரின் இளைஞரை அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம்…! சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி…!
கராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மாவை இடமாற்றம் செய்து, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் சித்தூரில், சாஹில் குப்தா என்பவர் மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது போலீசார் அவரது வாகனத்தை மடக்கி பிடித்துள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை காட்டுமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து, போலீசாரிடம் ஆவணங்களை காட்டி கொண்டிருக்கும்போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவரது மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்துள்ளார்.பின் குப்தாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இளைஞனை மாவட்ட அஆட்சியார் அறையும் வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞனிடம் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், கராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மாவை இடமாற்றம் செய்து, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.