மருந்து வாங்க சென்றவரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்…!

Default Image

சத்தீஸ்கரில் மருந்து வாங்க சென்றவரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டிஸ்கர் மாநிலம் சித்தூரில், சாஹில் குப்தா என்பவர் மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது போலீசார் அவரது வாகனத்தை மடக்கி பிடித்துள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை காட்டுமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து, போலீசாரிடம் ஆவணங்களை காட்டி கொண்டிருக்கும்போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவரது மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்துள்ளார்.பின் குப்தாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினரும் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த காட்சி வீடியோவில் படம் பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குப்தாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் போலீசார் அவர் வேகமாக வாகனத்தை ஓட்டி அதனால்தான் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்